×

டிரையம்ப் ஸ்பீடு 400

டிரையம்ப் நிறுவனம் , பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் என்ற மோட்டார் சைக்கிள்களை தயாரித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த வாரமே இந்த நிறுவனம் வெளியிட்டது. இவற்றில் டிரையம்ப் ஸ்பீடு 400 மோட்டார் சைக்கிளின் விலை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஷோரூம் விலை சுமார் ரூ.2.23 லட்சம்.

இந்த நிறுவனத்தின் குறைந்த விலையுள்ள பைக் இதுதான். யாரும் எதிர்பாராத குறைந்த விலையாக உள்ளதால், ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440, பிஎம்டபிள்யூ ஜி310, ஜி310ஜிஎஸ் மற்றும் கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வெஞ்சர் பைக்குகளுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் 398 சிசி, 4 வால்வு கொண்ட லிக்விட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுளளது.

இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 40 பிஎஸ் பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 37.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28 கி.மீ. மைலேஜ் வழங்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் விலை பின்னர் அறிவிக்கப்படும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

The post டிரையம்ப் ஸ்பீடு 400 appeared first on Dinakaran.

Tags : Triumph Company ,Bajaj ,Triumph ,Dinakaran ,
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...