×

உலக கோப்பை கிரிக்கெட் இன்னும் 85 நாள்

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் முதல் இடத்தில் உள்ளார். இவர் 2003 உலக கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 7 ஓவரில் 15 ரன் மட்டுமே கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்டி பிச்செல், அதே தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 20 ரன் கொடுத்து 7 விக்கெட்டும், நியூசிலாந்தின் சவுத்தி 2015ல் இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன் கொடுத்தும், வெஸ்ட்இண்டீசின் வின்ஸ்டன் டேவிஸ் 1983ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 51 ரன் கொடுத்தும் 7 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலியாவின் கேரி கில்மோர் 1975ல் (இங்கிலாந்துக்கு எதிராக), இந்தியாவின் நெக்ரா 2003ல் (இங்கிலாந்துக்கு எதிராக), நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் 2003ல் (ஆஸி.க்கு எதிராக), இலங்கையின் சமிந்தா வாஸ் 2003ல் (வங்கதேசத்திற்கு எதிராக) வெஸ்ட்இண்டீசின் கேமர் ரோச் 2011ல் (நெதர்லாந்துக்கு எதிராக), ஆஸி.யின் ஸ்டார்க் 2015ல் (நியூசி.க்கு எதிராக) 6 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

The post உலக கோப்பை கிரிக்கெட் இன்னும் 85 நாள் appeared first on Dinakaran.

Tags : Cricket World Cup ,Australia ,Glenn McGrath ,World Cup ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை...