×

ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி விவகாரத்தில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதி வாக்காளர் நிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 7ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், ‘தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது. அதனை நீதிமன்றம் ரத்து செய்கிறது. இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக ஓ.பி.ரவீந்திரநாத், மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்திருந்தது.

இந்நிலையில், திமுகவை சேர்ந்த சங்கர் தமிழ்செல்வன், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு இன்று தாக்கல் செய்தார். அதில், ‘தேனி நாடாளுமன்ற தொகுதி விவகாரத்தில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது. அதை ரத்து செய்கிறோம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பிலோ அல்லது அவரை சார்ந்தவர்களோ மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் எங்களது வாதங்களை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : O.P. Ravindranath ,DMK ,Supreme Court ,New Delhi ,OP ,Rabindranath ,O.P. Rabindranath ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...