×

உத்தரகாண்ட்டில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கி 4 பேர் பலி; தேவையற்ற பயணங்களை தவிர்க்க மாநில முதல்வர் வேண்டுகோள்..!!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர். இமாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வீடுகள் அடித்துச் செல்லப்படுகிறது. பல இடங்களில் வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழையால், உத்தரகாசியில் உள்ள கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் ஒரு டெம்போ டிராவலர் மற்றும் இரண்டு கார்கள் இடிபாடுகளில் சிக்கியதோடு வாகனத்தின் மீது கற்பாறைகள் மோதின.

இதனால் வாகனத்தில் பயணித்த 21 பேரில் 4 பேர் பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மழைக்காலங்களில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு யாத்திரிகர்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post உத்தரகாண்ட்டில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கி 4 பேர் பலி; தேவையற்ற பயணங்களை தவிர்க்க மாநில முதல்வர் வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakand ,Dehratoon ,Utterakhand ,Himachal Pradesh ,Uttarkandt ,Chief of State ,Dinakaran ,
× RELATED செல்போனில் புதிய வசதி பூகம்பம் வருவதை...