×

என்.டி.ஏ.கூட்டணியில் பாஸ்வானை மீண்டும் சேர்க்க திட்டம்: பீகாரில் நிதிஷ்குமாரின் வேகத்தை குறைக்க பாஜக முயற்சி

பீகார்: பீகார் மாநிலத்தின் இளம் அரசியல் தலைவரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வானுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடம் அழைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு பீகார் சட்ட பேரவை தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிராக் பாஸ்வான் எம்.பி விலகியபோதும் அவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை எதிர்த்தும் பாஜகவை ஆதரித்தும் வருகிறார்.

எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ்குமாரின் வேகத்தை குறைப்பது எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கான தடத்தை அகலப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக லோக் ஜனசக்தி கட்சியை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மாதம் 20ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடருக்கு முன்பு சிராக் பாஸ்வான் ஒன்றிய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நேற்று சிராக் பாஸ்வானை நேரில் சந்தித்த ஒன்றிய இணையமைச்சர் நிதியானந்த்ராய் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

The post என்.டி.ஏ.கூட்டணியில் பாஸ்வானை மீண்டும் சேர்க்க திட்டம்: பீகாரில் நிதிஷ்குமாரின் வேகத்தை குறைக்க பாஜக முயற்சி appeared first on Dinakaran.

Tags : N.N. TD PA ,Baswan ,Bajaka ,Nitishkumar ,Bihar ,Siriak Baswan ,Lok Janakshti Party ,Union Cabinet ,N. TD PA ,Raja ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...