×

நீடாமங்கலத்தில் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பாராட்டு

 

நீடாமங்கலம், ஜூலை 11: நீடாமங்கலம் வணிகர் சங்கம் சார்பில், அரசு பொதுத்தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசினர் உயர்நிலைப்பள்ளி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களை பாராட்டி கேடயம், பொன்னாடை மற்றும் ரூ.1000 பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி அந்தந்த பள்ளியில் வணிகர் சங்கம் சார்பில் நடந்தது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

The post நீடாமங்கலத்தில் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Niedamangalam ,Niedamangalam Merchants Association ,Dinakaran ,
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி