×

மலுமிச்சம்பட்டி அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி

 

மதுக்கரை. ஜூலை 11: மலுமிச்சம்பட்டியில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் புருஷானி பகுதியை சேர்ந்தவர் பதான் சிங் (38). கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமைதூக்கும் தொழிலாளி. பதான் சிங் நண்பர்களுடன் இங்குள்ள கல்லூரி அருகே மதுக்குடித்தார். பின்னர் குடிபோதையில் அங்கிருந்த கிணறு அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பதான் சிங் கிணற்றில் தவறி விழுந்தார்.

இதனையடுத்து செட்டிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி பார்த்தனர். அப்போது பதான் சிங் இறந்துவிட்டது தெரியவந்தது. சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post மலுமிச்சம்பட்டி அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : North State ,Malumichambatti ,Madhukarai ,Odisha ,Dinakaran ,
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ...