×

வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமையில் ஜூலை மாத இறுதியில், திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையின் மூலம் பல நூறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், ஏற்றுமதியாளர்களிடையே ஆண்டில் மாநில பொதுமக்கள், ஏற்படுத்தும் உணவு வகையில், வேளாண் கண்காட்சி பதப்படுத்துபவர்கள், 2023-24 திருச்சியிலும், ஆம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள், வாழை மலர்களுக்கான கண்காட்சி சென்னையிலும், பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 8.07.2023 மற்றும் 9.07.2023 ஆகிய தேதிகளில் சென்னையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கண்காட்சி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. வேளாண் வணிகத் திருவிழா 2023 மிக வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் ரூ. 2.5 கோடி மதிப்பிலான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை ஆகியுள்ளது. அச்சமயம், இது போன்ற கண்காட்சிகள் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் நடத்தப்பட வேண்டுமென்று அறிவுறுத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக, சூலை 27ம் தேதி முதல் 29ம் தேதி முடிய திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் விவசாயிகளுக்கு தேவைப்படும் விதைகள், தென்னங்கன்றுகள் மற்றும் பழமரக்கன்றுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதுடன், அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து வேளாண் இயந்திரங்களையும் காட்சிப்படுத்தி விவசாயிகளுக்கான நடவடிக்கை எடுத்திட அனைத்து திட்டங்களைப் வேண்டும் பற்றியும் எனவும், தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைத்திட வேண்டும் எனவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்திட அறிவுறுத்தினார்.

நடவடிக்கை எடுத்திட வேண்டும் அதிக அளவில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றிட நடவடிகக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். என விவசாயிகளுக்கான புதிய தொழில்நுட்பங்கள், மின்னணு விற்பனை, வேளாண் காடுகள், உயரிய தோட்டக்கலை தொழில்நுட்பம், நவீன வேளாண் இயந்திரங்கள், வேளாண் ஏற்றுமதி போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

The post வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமையில் ஜூலை மாத இறுதியில், திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Minister ,Agriculture and Farmers Welfare ,M. R.R. K.K. ,Panneerselvam ,Agricultural Exhibition ,Tiruchirappalli ,Chennai ,Minister of Agriculture and Farmers Welfare ,M. R.R. K.K. Panneerselvam ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...