×

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சேலம்: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அகில இந்திய கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் தமிழ்நாட்டில் கலந்தாய்வுக்கான தேதி வெளியிடப்படும். சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை 150ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ஒன்றிய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

The post மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subharamanyan ,Salem ,Supremanian ,Ma ,
× RELATED சேலம் மாவட்டம் ஏற்காடு...