×

சென்னை இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை இன்று ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி

சென்னை: இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சர் உதயநிதி இன்று ஆய்வு செய்தார். இந்தப்பணிகளை மக்களை பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளவும், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக விரைந்து முடித்திடவும் அதிகாரிகள், அலுவலர்களை வலியுறுத்தினோம் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை அமைச்சர் உதயநிதி மற்றும் மேயர் பிரியா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடரும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. பருவமழையின்போது தினம்தோறும் கொட்டித்தீர்க்கும் மழையால், மழைநீர் சாலை, தெருக்களில் தேங்காமல் வடிகால்கள் வழியே கால்வாய்கள், ஆறுகளுக்குச் சென்று, கடலில் கலக்க வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கம் என்றார்.

மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 300 கி.மீ நீளத்திற்கு மேல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும், இந்தாண்டு இறுதி மற்றும் அடுத்த ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையின் முக்கிய பகுதிகளில் சாலைகள், தெருக்களில் மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய நகரங்களில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் உதயநிதி மற்றும் மேயர் பிரியா ஆகியோர் ஆய்வ செய்தனர். பின்னர் அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் பணிகளை சீக்கிரமாக முடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

The post சென்னை இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை இன்று ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi ,Peters Road ,Chennai ,Iraipatta ,Udhayanidi ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...