×

டாஸ்மாக்கில் மதுபான விற்பனை சரிந்துள்ளது குறித்து இன்று அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை

சென்னை: டாஸ்மாக்கில் மதுபான விற்பனை சரிந்துள்ளது குறித்து தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. தலைமை செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது மதுபான விற்பனை சரிந்துள்ளது குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் மதுபான கடைகளில், மதுபான விற்பனை அதிகரிப்பு, ஊழியர்களின் பாதுகாப்பு, மதுபான கடைகளில் பணப்பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை சார்ந்த உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் டெட்ரா பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள டாஸ்மாக் மதுபான வகைகள் தொடர்பாகவும் இந்த ஆலோசிக்கப்பட்ட உள்ளது.

The post டாஸ்மாக்கில் மதுபான விற்பனை சரிந்துள்ளது குறித்து இன்று அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthusamy ,Tasmak ,Chennai ,Tamil Nadu Government ,Muthusami ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!