×

லாரி பேட்டரி திருடிய டிரைவர்கள் கைது

 

பாலக்காடு, ஜூலை 10: பாலக்காடு மாவட்டம் திருத்தாலா, சாலிச்சேரி, எருமப்பட்டி, பட்டாம்பி ஆகிய இடங்கள். மலப்புரம் மாவட்டம் பொன்னாணி, குன்னம்குளம், மலப்புரம், கொண்டோட்டி, மோங்கம் ஆகிய இடங்களில் சாலையோரம் பழுதடைந்த வாகனங்களை நோட்டமிட்டு பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக சாலிச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சாலிச்சேரி சர்க்கிள் இஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் இரவு-பகல் நேரங்களில் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்தனர்.

அப்போது சாலிச்சேரி சந்திப்பு பகுதியில் 2 பேர் பேட்டரியுடன் கையும் களவுமாக போலீசாரிடம் பிடிப்பட்டனர். விசாரணையில், கருகம்புத்தூறைச் சேர்ந்த ஷக்கீர் (38), சங்கனாச்சேரியைச் சேர்ந்த நவுசாத் (39) எனவும், இருவரும் டிப்பர் லாரி டிரைவர் எனவும் தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post லாரி பேட்டரி திருடிய டிரைவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Thirtala ,Salicherry ,Erumapatti ,Pattambi ,Palakkad district ,Malappuram district ,Ponnani ,Dinakaran ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...