×

டூவீலர்கள் மோதலில் வாலிபர் பலி

 

பரமக்குடி, ஜூலை 10: சத்திரக்குடி அருகே சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது மற்றொரு டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார். சத்திரக்குடி அருகே அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(26). இவரது அண்ணன் வத்தலக்குடியில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சாப்பாடு கொடுக்க நேற்று டூவீலரில், அரியகுடி விளக்கில் சாலையை கடக்க முயன்ற போது, முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி வந்த டூவீலர் பிரபாகரன் வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது.இதில் காயம் அடைந்த பிரபாகரன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post டூவீலர்கள் மோதலில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Chatrakudi ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்