×

ஆடு திருடியவர் கைது

தேனி, ஜூலை 10: தேனி அருகே உப்புக்கோட்டையில் குடியிருப்பவர் ஜெயராஜ் மகன் மணிமாறன்(36). இவர் தேனி பழனிசெட்டிபட்டியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் வளர்த்த செம்மறி ஆட்டினை வீட்டு முன்பாக கட்டி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 4ம் தேதி இந்த செம்மறி ஆடு திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மணிமாறன் வாட்ஸ்ஆப் மூலம் ஆட்டின் புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதை கம்பம் அருகே வடக்குப்பட்டியில் கறிக்கடை நடத்தி வரும் அபுதாகிர் என்பவர் பார்த்துள்ளார். அதன்பின், இந்த ஆடு கம்பம் வடக்கு பட்டியில் சூர்யா என்பவரது வீட்டில் இருப்பதாக மணிமாறனுக்கு அபுதாகிர் செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து, மணிமாறன் வடக்கு பட்டிக்கு சென்று சூர்யா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவரது ஆடு இருப்பதை தெரியவந்தது. இதனையடுத்து, மணிமாறன் புகாரில் வீரபாண்டி போலீசார் சூர்யாவை கைது செய்து, அவர் திருடிய ஆட்டை பறிமுதல் செய்தனர்.

The post ஆடு திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Jayaraj ,Manimaran ,Honey Paranisettipabi ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை