×

300 பஸ்ல கூட்டிட்டு வந்தவங்க எஸ்கேப்…அப்செட்டான நிர்மலா சீதாராமன் கேட்டை பூட்டி சிறைவைத்த பாடிகாட்கள்

புதுச்சேரியில் வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு 1.42 லட்சம் பேருக்கு ரூ.2 ஆயிரத்து 628 கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தை சேர்ப்பதற்காக வங்கி அதிகாரிகள் மற்றும் பாஜவினர் புதுச்சேரி முழுவதும் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலை திட்ட பணிகளை ரத்து செய்து 300க்கும் மேற்பட்ட பஸ்களில் ஆட்களை மைதானத்திற்கு அழைத்து வந்தனர். 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பந்தலில் அவர்கள் அமர வைக்கப்பட்டனர். அவர்கள் கலைந்து செல்லக்கூடாது என்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேரமானதால் பொறுமையிழந்த முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டம் கூட்டமாக வெளியேறினர்.

அப்போது பவுன்சர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் அவர்களை வெளியே செல்ல விடாமல் கதவை இழுத்து மூடினர். இதனால் சிலர் மயக்கமடைந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏற்கனவே வங்கிகளில் கடனுதவி பெற்ற பயனாளிகளையும் கணக்கு காட்டுவதற்காக மீண்டும் அதிகாரிகள் அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கூட்டம், கூட்டமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது பவுன்சர்கள் பொதுமக்களை மிரட்டி கேட்டை இழுத்து பூட்டி உள்ளே அடைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post 300 பஸ்ல கூட்டிட்டு வந்தவங்க எஸ்கேப்…அப்செட்டான நிர்மலா சீதாராமன் கேட்டை பூட்டி சிறைவைத்த பாடிகாட்கள் appeared first on Dinakaran.

Tags : Basla ,Andavanganga Escape ,Abset ,Nirmala Sitharaman Gate ,Puducherry ,300 Basla Gurgaon Escape ,Abset Elise Sitharaman Gate ,Dinakaran ,
× RELATED மலைக்கோட்டை சம்பவத்தால் அப்செட்டில்...