×

வங்கதேசத்துடன் முதல் டி20 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ஹர்மன்பிரீத் அரை சதம்

மிர்பூர்: வங்கதேச மகளிர் அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச… வங்கதேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்தது. ஷோர்னா அக்தர் 28*, சோபனா மோஸ்தாரி 23, ஷதி ராணி 22, ஷமிமா சுல்தானா 17 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பூஜா வஸ்த்ராகர், மின்னு மணி, ஷபாலி வர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து வென்றது. ஷபாலி 0, மந்தனா 38, ஜெமிமா 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 54 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), யஸ்டிகா பாட்டியா 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹர்மன்பிரீத் சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 மிர்பூரில் நாளை நடக்கிறது.

The post வங்கதேசத்துடன் முதல் டி20 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ஹர்மன்பிரீத் அரை சதம் appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Harmanfreith ,Mirpur ,Bangladesh Women's Team ,Mirpur National ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது