×

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை: 1,021 மருத்துவர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். தேர்வுமூலம் 1,021 மருத்துவர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். படித்த தமிழ்நாடு மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழுடன் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளில் சேரலாம், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு இடங்களில் 22,541 மாணவர்களும் சுயநிதி இடங்களில் 10,108 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வரும் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மெரிட் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

The post எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Chennai ,Ma. Supramanyan ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...