×

பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் ஏழை ஜோடிக்கு திருமணம்

செங்கோட்டை, ஜூலை 9: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் ஏழை ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஏழை ஜோடிக்கு திருமணம் நடந்தது. மண்டல இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் கோமதி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் சரக ஆய்வர் சேதுராமன், தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கேஎன்எல் சுப்பையா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் காலசாமி, வேல்முருகன், சண்முக வடிவு, ஜெயக்குமார் பாண்டியன், பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண விழாவில் கோயில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குத்துவிளக்கு, கட்டில், பீரோ, மெத்தை, சில்வர் குடம், மிக்ஸி உட்பட வீட்டு உபயோக பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. பின்னர் மணமக்களுக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டது.

The post பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயிலில் ஏழை ஜோடிக்கு திருமணம் appeared first on Dinakaran.

Tags : Panbozhi Tirumala Kumaraswamy Temple ,Sengotta ,Hindu Religious Charities ,
× RELATED உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி...