×

கனகசெட்டிகுளம் பகுதியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்

காலாப்பட்டு, ஜூலை 9: புதுச்சேரி அருகே கனகசெட்டிகுளம் பகுதியில் நேற்று கடல் சீற்றம் அதிகரித்து ஆக்ரோஷ அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர். புதுச்சேரி காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிகுளம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கடல் சீற்றம் அதிகரித்து திடீரென அலைகள் ஆக்ரோஷமாக ஆர்ப்பரித்து எழுந்தன. மீனவர்களின் படகு மற்றும் வலைகள் நிறுத்தி இருக்கும் இடங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், உடனே அங்கிருந்த படகு, வலை மற்றும் இன்ஜின் ஆகியவற்றை மேடான பகுதிகளுக்கு எடுத்து சென்றனர். இதேபோன்று தமிழகப் பகுதியான அனிச்சங்குப்பம், முதலியார்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கடல் சீற்றம் காரணமாக திடீரென கடல்நீர் படகு நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு உள்ளே சென்று குளம்போல் காட்சி அளித்தது. தொடர்ந்து, கடல் அலையின் சீற்றம் ஆக்ரோஷமாக இருப்பதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

The post கனகசெட்டிகுளம் பகுதியில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kanakasetikulam ,Kalapattu ,Puducherry ,
× RELATED தூண்டில் வளைவு அமைக்கக்கோரி...