×

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை, ஜூலை 9: கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் கால்பந்தாட்ட விளையாட்டு போட்டி நடைபெற்றது. 32 அணிகள் மோதும் இந்த போட்டியில் 16 மகளிர் அணியும், 16 ஆடவருக்கான அணிகளும் பிரிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 350 கால்பந்தாட்ட வீரர்கள் களமிறங்கி விளையாடுகின்றனர். கால்பந்தாட்ட போட்டி தொடக்க விழா நேற்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் பொன்.கவுதம் சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, எழிலன், எம்.கே.மோகன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். கால்பந்தாட்ட போட்டிகளை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,‘‘எனக்கும் திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணிக்கும் ஒரே நாள் தான் பிறந்த நாள். எனது பிறந்தநாள் அன்று தான் திமுகவில் இந்த அணி அறிவிக்கப்பட்டது. புது அணியாக இருந்தாலும் திமுகவில் மிகவும் வசதியான செழிப்பான அணியாக விளையாட்டு மேம்பாட்டு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

நான் விளையாட்டு துறைக்கு அமைச்சராகி 6 மாதங்கள் ஆகிறது. எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம் என்னுடைய முதல் கையொப்பமே முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு தான். நான் பதவியேற்ற பிறகு விளையாட்டு துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
3 லட்சத்து 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ள முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 24ம் தேதி அனைத்து போட்டிகளும் நிறைவுற்ற 25ம் தேதி போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்க உள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள். தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்ற வருகிறது. தமிழ்நாட்டில் முதன் முறையாக 2023 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் அளிப்பார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Udhayanidhi Stalin ,Chennai, ,Dizhagi Sports Development Team ,Rayapet ,Chennai ,of ,Tamil ,Nadu ,
× RELATED மாதவரத்தில் திமுக சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி