×

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: வணிகர் நல வாரியத்திலுள்ள அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக் காலம் 2011 ஆண்டுடன் நிறைவு பெற்றதால், தங்களை வணிகர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் தெரிவித்து தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூடுதல் ஆணையர், முதன்மைச் செயல் அலுவலர் கடந்த 2019ம் ஆண்டு கருத்துருவினை அரசுக்கு அனுப்பிவைத்தார். தமிழ்நாடு வணிகர் நல வாரிய கூடுதல் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.

பரிசீலனைக்குப்பின், தமிழ் நாடு வணிகர் நல வாரியத்தை கீழ்கண்டவாறு மாற்றியமைத்து ஆணையிடுகிறது: அலுவல் சாரா உறுப்பினர்கள் சமீப காலங்களில் வணிக வகைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி உள்ளதால் அனைத்து பிரிவுகளுக்கும் பிரிதிநிதித்துவம் அளிக்கும் விதமாக அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20லிருந்து 30ஆக உயர்த்தியும் உறுப்பினர்களை நியமனம் செய்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வணிகர் நல வாரியம் வணிகவரி ஆணையரின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும். அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தவிர மற்ற அனைத்து வகையிலும் 1989ம் ஆண்டு அமைக்கப்பட்ட வணிகர் நல வாரியத்திற்குரிய வரன்முறைகளும், சட்டதிட்டங்களும் தற்போது இந்த அரசாணையில் மாற்றியமைக்கப்படும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்திற்கும் பொருந்தும்.

The post தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Merchant Welfare Board ,Chennai ,Tamil Nadu Commercial Taxes and Journalism ,Jyoti Nirmaalasamy ,Office of Merchant Welfare Board ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...