×

எம்பிபிஎஸ், பிடிஎஸ்க்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், அரசு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. எனவே, நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தயாராகி வருகின்றனர். மேலும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர ஜூன் 28 தேதி முதல் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவித்தது. இந்த நிலையில் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுள்ளது.

இது குறித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2023 – 2024ம்‌ கல்வி ஆண்டில்‌ மருத்துவம்‌ மற்றும்‌ பல்‌ மருத்துவம்‌ படிப்புகளில்‌ சேருவதற்கு ஜூலை 10ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஜூலை 12ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது.

The post எம்பிபிஎஸ், பிடிஎஸ்க்கு விண்ணப்பிக்க கால அவகாசம்: மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MBBS ,BDS ,Directorate of ,Education ,CHENNAI ,Tamilnadu ,Govt ,MPBS ,Directorate of Medical Education ,Dinakaran ,
× RELATED நீட் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியீடு