×

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விஞ்ஞானி பிரதீப் குருல்கருக்கு எதிராக தீவிரவாத தடுத்து படை குற்றப்பத்திரிகை

டெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்திருப்பதாக கைது செய்யப்பட்டிருக்கும் இந்திய விஞ்ஞானி பிரதீப் குருல்கர். பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த பெண்ணுக்கு இந்திய ஏவுகணை பற்றிய ரகசிய தகவல்களை அனுப்பியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது உறுதியானதை அடுத்து டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி பிரதீப் குருல்கர். புனேவில் கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளரான பிரதீப் குருல்கர் நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் நிலையில் மஹாராஷ்டிரா காவல் துறையின் தீவிரவாத தடுப்பு படையினர் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஸாரா தாஸ் குப்தா என்ற புனை பெயரை பயன்படுத்திய பாகிஸ்தான் உளவுதுறை பெண்ணால் ஈர்க்கப்பட்ட பிரதீப் குருல்கர். இந்திய ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட ரகசிய பாதுகாப்பு திட்டங்கள் பற்றி அவருடன் உரையாடி இருப்பதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.

பிரதீப் குருல்கரும், ஸாராவும் வாட்ஸ்அப், குரல், வீடியோ அழைப்புகள் மூலமாக தொடர்பில் இருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸாரா இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு மென்பொறியாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு ஆபாச செய்திகள் மற்றும் விடீயோக்களை அனுப்பி பிரதீப் குருல்கருடன் தவறாக நடந்துகொண்டதாகவும் ஆனால் தங்களது ஸாராவின் கணினி ஐபி முகவரி பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ஏடிஎஸ்யின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரபோஸ் ஏவுகணை லாஞ்சர், யூசிவி, அக்னி ஏவுகணை மற்றும் ராணுவ சிஸ்டம் தொடர்பான ரகசிய மற்றும் மிக முக்கிய தகவல்களை பாகிஸ்தான் பெண் ஏஜென்ட் பெற முயன்றிருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது. ஸாராவாள் இழுக்கப்பட்ட குருல்கர் தன்னுடைய கைபேசியில் சேமித்து வைத்திருந்த ரகசிய தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டார் என்றும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. இருவரும் ஜூன் 2022 முதல் டிசம்பர் 2022 வரை தொடர்பில் இருந்ததாக ஏடிஎஸ் குற்றம் சாட்டியுள்ளது.

The post பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விஞ்ஞானி பிரதீப் குருல்கருக்கு எதிராக தீவிரவாத தடுத்து படை குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : Pradeep Kurulkar ,Pakistan ,Inter-Terrorism Force ,Delhi ,Terrorist Prevention Force ,
× RELATED கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை