×

ஊட்டி – கூடலூர் சாலையில் அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்

ஊட்டி :ஊட்டி – கூடலூர் சாலையில் அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் நிலையில்,பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக, ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலைகுந்தா முதல் நடுவட்டம் வரையில் சாலையோரங்களில் உள்ள கற்பூர மரங்கள்,சீகை மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

சில சமயங்களில் சோலை மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிப்ப ஏற்படுகிறது. இதனால்,பொதுமக்கள்,சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பாதித்து வருகின்றனர். அபாயகரமான இந்த மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பைக்காரா, கிளன்மார்கன் மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படுகிறது.இதனால், சாலையோரங்களில் உள்ள மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இச்சாலையில் சாண்டிநல்லா பகுதியில் ராட்சத கற்பூர மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நடுவட்டம் முதல் கூடலூர் வரையில் சில இடங்களில் சாலையில் மரங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகள் எந்நேரமும் விழும் அபாயம் நீடிக்கிறது. நடுவட்டம், பைக்காரா போன்ற பகுதிகளிலும் மரங்கள் விழும் அபாயம் நீடிக்கிறது. இதனால், ஊட்டி – கூடலூர் சாலையில் நடுவட்டம் முதல் கூடலூர் வரையில் சாலையோரங்களில் அபாயகரமாக தொங்கிக் கொண்டிருக்கும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகளை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இன்றியும், போக்குவரத்திற்கு இடையூ ஏற்படாமல் சாலையில் தொங்கிக் கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது கலெக்டர் அம்ரித் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

The post ஊட்டி – கூடலூர் சாலையில் அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Oodi-Cuddalore road ,Tourism Minister ,Ramachandran ,Goodalore road ,Nilgiri District ,Cuddalore road ,Dinakaran ,
× RELATED ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராக பதவி...