×

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு, 2 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு

ஆண்டிகுவா: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் டெஸ்ட் வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரோசோ வின்டர்சர் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2வது டெஸ்ட் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் 20-24ம்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ரஹ்கீம் கார்ன்வால், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோமெல் வாரிக்கன் மற்றும் அறிமுக வீரர்களாக டாப் ஆர்டர் பேட்டரான 22 வயது கிர்க் மெக்கென்சி, பேட்டிங் ஆல்ரவுண்டரான 24 வயது அலிக் அதானாஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி அணியின் தேர்வாளர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் கூறுகையில்,, “அண்மையில் வங்கதேச சுற்றுப்பயணத்தில் ஏ அணியில் இடம்பெற்ற மெக்கென்சி மற்றும் அதானாசின் பேட்டிங் அணுகுமுறையால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். அவர்கள் அணியில் இடம்பெற தகுதியானவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம், ஏனெனில் அவர்கள் நன்றாகவும் முதிர்ச்சியுடனும் செயல்பட்டனர்” என்றார். அணி விபரம்: கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன். இவர்களுடன் டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான் ஆகியோர் பயண இருப்பு வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

The post இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு, 2 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : India ,West Indies ,Antigua ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...