×

விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை குறைக்க கோரி அமைச்சரிடம் மனு

 

சோமனூர், ஜூலை 8: கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் நேற்று சென்னையில் நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நேரில் சந்தித்து விசைத்தறிகளுக்கான டேரிப் 3ஏ2 பில் கூடுதல் மின்கணக்கீடு தொகையை கழித்து தரக்கோரியும், நிலுவை மின் கட்டணத்துக்கு வட்டி மற்றும் அபராதத் தொகையை ரத்து செய்யக் கோரியும் நேரில் வலியுறுத்தி மனு வழங்கியுள்ளனர்.

இந்த மனுவுக்கு ஏற்கனவே பரிசீலனையில் இருப்பதாகவும், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாகவும் நிர்வாகிகளிடம் அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார். மேலும், மின் வாரிய உயர் அதிகாரிகளையும், தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலக செயலாளரையும் தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனுஅளித்தனர். இதில், கோவை திருப்பூர் மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், தெக்கலூர் பொன்னுச்சாமி, பூபதி, கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post விசைத்தறியாளர்கள் மின் கட்டணத்தை குறைக்க கோரி அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Somanur ,Coimbatore ,Tirupur District ,Coimbatore Weaving Power Loom Owners' Unions ,Dinakaran ,
× RELATED நீர்மட்டம் 23 அடியாக சரிவு மேய்ச்சல் நிலமாக மாறிய திருமூர்த்தி அணை