×

நாடுகாணியில் பெய்த கன மழையால் பாலத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது

 

பந்தலூர், ஜூலை 8: பந்தலூர் அருகே நாடுகாணி பகுதியில் பாலத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்டது நாடுகாணி. இங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்து தேவாலா அட்டி செல்லும் சாலையின் குறுக்கே இருந்த பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமானது. அந்த இடத்தில் புதிய பாலம் கட்டிதரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து நெல்லியாளம் நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழைக்கு பாலத்தின் ஒரு பகுதி தடுப்புசுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் மேலும் சேதம் ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

The post நாடுகாணியில் பெய்த கன மழையால் பாலத்தின் தடுப்புசுவர் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Nadukhani ,Nadukani ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்