×

சீர்காழி வட்டத்தில் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரம் வழங்கல்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டார விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்க குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சீர்காழி வட்டாரதின் குறுவை சாகுபடி இலக்காக 10500 ஏக்கர் நிர்ணயிக்கபட்டுள்ளது. இதில் 7300 ஏக்கருக்கு குறுவை சிறப்பு தொகுப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி. ஏ. பி உரம் மற்றும் 25 கிலோ பொட்டாஷ் உரம் அடங்கிய உரத்தொகுப்பு 100 சத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு மட்டுமே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உழவன் செயலி மூலம் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து குறுவை தொகுப்பு திட்ட பெற்று பயனடையமாறு சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் கூறியுள்ளார்.

The post சீர்காழி வட்டத்தில் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Kurvai ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் குறுவை சாகுபடி பணியில் தீவிரம் காட்டும் விவசாயிகள்