×

ஆட்டோவில் பேட்டரி திருடிய 2 பேர் கைது

தூத்துக்குடி, ஜூலை 8:தூத்துக்குடி, 3வது மைல் பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் சுடலைமுத்து (38). ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை தூத்துக்குடி டைமண்ட் காலனி சாலையில் நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று முன்தினம் காலையில் வந்து பார்த்த போது, ஆட்டோவில் இருந்த பேட்டரியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து சிப்காட் போலீசில் சுடலைமுத்து புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் சபரிஸ்குமார்(28), தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த குமாரசாமி மகன் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

The post ஆட்டோவில் பேட்டரி திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Sudalaimuthu ,Poolpandi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல்...