×

திமுக வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிவிப்பு

சென்னை: திமுக வர்த்தகர் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமனம் செய்து வர்த்தகர் அணியின் செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பட்டியல் பின்வருமாறு: சென்னை வடகிழக்கு மாவட்டத்தின் தலைவராக பாபு, துணை தலைவராக சுரேஷ், அமைப்பாளராக தியாகராஜன், துணை அமைப்பாளர்களாக சுப்பிரமணியன், தமிழ்செல்வன், பிரேம்குமார், கார்த்திக், ஹரிராமன், பழனி, பொன்ராஜ், மணிகண்டன், அசோக், மணிகண்டன், துரைராஜ், தினேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தின் தலைவராக சண்முகசுந்தரம், துணை தலைவராக தினேஷ்பாபு, அமைப்பாளராக தினகரன், துணை அமைப்பாளர்களாக ராஜேந்திரன், பழனி, தணிகாசலம், தருமன், ராஜா, சுரேஷ், ஜெய்சங்கர், ஏழுமலை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாநகரத்தின் அமைப்பாளராக ரவிச்சந்திரன், துணை அமைப்பாளர்களாக கருணாநிதி, சீனிவாசன், ராஜா, பாலமுருகன், சீனிவாசன், பூபதி, மூர்த்தி, ராஜூ, சரவணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு காசி முத்துமாணிக்கம் அறிவித்துள்ளார்.

The post திமுக வர்த்தகர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமனம்: செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Traders Team ,Kashi Muthumanikam ,Chennai ,DMK traders ,Kashi ,
× RELATED ராதாபுரம் அருகே துவக்க பள்ளி...