×

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை

மதுராந்தகம்: கோழியாளத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. விசிகவினர், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், இட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளத்தில் உள்ள மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கலைக்கதிரவன், மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியச்செயலாளர் மொறப்பாக்கம் தயாநிதி அனைவரையும் வரவேற்றார். விசிக கட்சி பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் பனையூர் மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, மண்டல செயலாளர் விடுதலைச்செழியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மணிமண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்பி சிறப்புரையாற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், ஏழை எளியவருக்கு 500 பேருக்கு புடவைகள், அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மகளிரணி மாநில துணை செயலாளர் தமிழினி, மாவட்ட செயலாளர்கள் தேவஅருள் பிரகாசம், செங்கை தமிழரசன், தொகுதி துணை செயலாளர் வேலவன், வழக்கறிஞர் உதயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் முருகவேல் வெங்கடேசன், மணிகண்டன், திலகவதி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பேரூர் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக ஒன்றிய நிர்வாகி கௌதமன் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து, திமுக கட்சி மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணர் உள்ளிட்ட நிர்வாகிகள் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விசிகவினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Bishikamalai Srinivasan ,Twin Malai Srinivasan ,Kozhikode ,Dudimamalai Srinivasan ,Vishikavas ,
× RELATED கேரளாவில் மின் கம்பத்தில் ஆம்புலன்ஸ்...