×

அமெரிக்க மூதாட்டியின் ஓய்வூதியத்தில் ரூ.3.37 கோடி ஏமாற்றிய 5 பேர் மீது வழக்கு: சிபிஐ நடவடிக்கை

புதுடெல்லி: மைக்ரோசாப்ட் ஊழியர்களாக நடித்து அமெரிக்க மூதாட்டியின் ஓய்வூதிய பணத்தில் ரூ.3.37 கோடியை ஏமாற்றிய 5 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் லிசா ரோத் என்ற மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த ஓய்வூதிய தொகையில் ரூ.3.37 கோடியை டெல்லியை சேர்ந்த பிரபுல் குப்தா, சரிதா குப்தா, குணால் அல்மாடி, கவுரவ் பாக்வா மற்றும் கான்பூரை சேர்ந்த ரிஷப் திக்ஷித் பறித்து கொண்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பில் இருந்து இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ.க்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் நால்வரும் சேர்ந்து லிசாவின் லாப்டாப்பை ஹேக் செய்தனர். இதை அறியாத லிசா லாப்டாப் சேவை எண்ணுக்கு போன் செய்து வரச் சொன்னார். அப்போது மைக்ரோசாப்ட் ஊழியராக நடித்து, லிசாவின் ஒரு வங்கி கணக்கில் இருந்த தொகையை பாதுகாப்பு காரணங்களுக்காக வேறொரு வங்கி கணக்கு மாற்றும்படி கூறி, அவரை தவறாக வழிநடத்தி அவரது தனிநபர் தகவல்களை சேகரித்து, அதன் மூலம் தங்களது கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கு மாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் 5 பேரையும் கைது செய்த சிபிஐ அவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

The post அமெரிக்க மூதாட்டியின் ஓய்வூதியத்தில் ரூ.3.37 கோடி ஏமாற்றிய 5 பேர் மீது வழக்கு: சிபிஐ நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : US ,CBI ,New Delhi ,Microsoft ,
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...