×

காலிறுதியில் சிந்து: கனடா ஓபன் பேட்மின்டன்

கல்காரி: கனடா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் விளையாட இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றார். 2வது சுற்றில் சிந்துவுடன் மோத இருந்த இந்தோனேசிய வீராங்கனை நிதயரா நட்சுகி, கடைசி நேரத்தில் காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனால் சிந்து காலிறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரேசில் வீரர் செல்கோ ஒய்கோருடன் மோதிய இந்திய நட்சத்திரம் லக்‌ஷியா சென் 21-15, 21-11 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி , 31 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் கிருஷ்ணபிரசாத் கரகா – விஷ்ணுவர்தன் கவுட் இணை இந்தோனேசியாவின் முகமது அசன் – சேடியவான் ஹென்ட்ரா ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

The post காலிறுதியில் சிந்து: கனடா ஓபன் பேட்மின்டன் appeared first on Dinakaran.

Tags : Sindhu ,Canada Open Badminton ,Calgary ,India ,Canada Open women's ,Dinakaran ,
× RELATED மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து