×

வன விலங்குகளை வளர்க்க விரும்புவோர் ஜூலை 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்

சென்னை: உயிரினங்களை வளர்ப்பவருக்கான உரிம விதிகள், 2023 இந்திய அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகமானது, வன உயிரினப் (பாதுகாப்புச்) சட்டம், 1972 –ன் அட்டவணை IV-ன் இணைப்பு I-ல் உள்ள உயிரினங்களை வளர்த்தல் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக உயிரினங்களை வளர்ப்பவருக்கான உரிமை விதிகள், 2023-ஐ 24 ஏப்ரல் 2023 அன்று வெளியிட்டுள்ளது.

இவ்விதிகளின் கீழ், தமிழ்நாட்டில் வன உயிரினப் (பாதுகாப்புச்) சட்டம், 1972 –ன் அட்டவணை IV-ன் இணைப்பு I-ல் உள்ள உயிரினங்களை வளர்த்து வருவபர்கள் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்து வருவபர்கள், உயிரினங்களை வளர்ப்பவருக்கான உரிமை விதிகள், 2023-ன் படிவம் I-ன் படி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சென்னைக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ 24.07.2023-க்குள் விண்ணப்பத்தினை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், கிண்டி-வேளச்சேரி பிரதான சாலை, கன்னிகாபுரம் செக்போஸ்ட் அருகில், கிண்டி, சென்னை – 32 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் இவற்றில் புதியதாக ஈடுபட விரும்புவோர், உயிரினங்களை வளர்ப்பவருக்கான உரிமை விதிகள், 2023-ன் படிவம் II-ன் படி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சென்னைக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ விண்ணப்பத்தினை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், கிண்டி-வேளச்சேரி பிரதான சாலை, கன்னிகாபுரம் செக்போஸ்ட் அருகில், கிண்டி, சென்னை – 32 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேற்கூறிய வளர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் ஈடுபட விழைகின்றோர் விண்ணப்பத்துடன் தங்களது முகவரிக்கான சான்று, தனது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை நகல், DGFT உரிமச்சான்றிதழ் (வேண்டியிருப்பின்), தலைமை வன உயிரினக் காப்பாளரால் வழங்கப்பட்ட தடையின்மைச் சான்றிதழ் (வேண்டியிருப்பின்), தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கான புகைப்படங்கள் (கால்நடை மருத்துவ வசதி, தனிமைப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி வசதி மற்றும் அனுமதி தேவைப்படும் உயிரினங்களின் புகைப்படம்) ஆகியவற்றுடன் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக்காப்பாளர், சென்னை அவர்களின் பெயரில் ரூ. 25,000-க்கான வரைவோலை அல்லது மின்செலுத்துகை முறையில் செலுத்தியதற்கான சான்றினை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 044-24329137 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வன விலங்குகளை வளர்க்க விரும்புவோர் ஜூலை 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் appeared first on Dinakaran.

Tags : Primary Chief Forest Guard ,Chennai ,Ministry of Environment, Climate Change and Forests ,Government of India ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...