×

அரசு நிலத்தை மீட்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: போருர் ராமச்சந்திரா பல்கலைக்கு வழங்கிய அரசு நிலத்தை மீட்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 1985-ல் ராமசந்திரன் அறக்கட்டளை தரப்பில் போரூர் அருகே மருத்துவக்கல்லூரி தொடங்க 269 ஏக்கர் நிலத்தை மீட்க முடிவெடுத்துள்ள நிலையில் அதன் நடவடிக்கை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

1989ல் கல்லூரி சொத்துக்களை எடுத்து கொண்ட நிலையில் அந்த மருத்துவக்கல்லூரியை நிகர்நிலை பல்கலையாக ஒன்றிய அரசு 1990-ல் அரக்கட்டளைக்குச் சொந்தமான 42 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லிங் கம்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. நிலத்தை கனரா வங்கியில் அடமானம் வைத்து பெட்ரா ரூ.500 கோடியை ஸ்டெர்லிங் நிறுவனம் செலுத்ததால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சர்ஃபாசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 42 ஏக்கர் நிலம் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. சர்ஃபாசி சட்டத்தின் கீழ் வாங்கிய நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுப்பதாக குறி எஸ்.சி.எம் நிறுவனம் வழக்கு தொடந்தது. சர்ஃபாசி சட்டத்தில் விற்கப்பட்ட சொத்து என்பதால் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி வாங்கியதாக எஸ்.சி.எம் தரப்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மனுதாரர் நிறுவனத்தின் கடன் பரிவர்த்தனைக்கு, வங்கி நடவடிக்ககைக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பால் பொது சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தீவிரமாக கருத வேண்டும் என்று இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

The post அரசு நிலத்தை மீட்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Madras High Court ,Chennai ,Borur Ramachandra University ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை...