×

புதிரை வண்ணார் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

 

 

சென்னை: புதிரை வண்ணார் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளனர். கல்வி மேம்பாடு, தொழிற்பயிற்சி, திறன் மேம்பாடு பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. ஆதிதிராவிடர் இனக்குழுவான பள்ளர், பறையர்களுக்கு மட்டும் சேவகம் செய்யும் ஒரு இனம்தான் புதிரை-வண்ணான். தமிழகம் கண்டிராத ஒரு இனக்குழுவாக வாழ்ந்து வருகிற புதிரை வண்ணான் என்ற இனம் யார் என்கிற பெரிய கேள்வியோடு தான் பார்க்கிறது. அதுமட்டுமில்லாமல் புதிரை வண்ணான் என்கிற அடையாளத்தை வேற சில வண்ணான் இனக்குழு மக்களம் தவறாக பயன்படுத்தி வருவதற்கும் இது போன்ற நிகழ்வுகள் வகை செய்து வந்தது.

புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்கு புத்துயிர் அளித்து வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் நலப் பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி வழங்கப்படும். மேற்காணும் அறிவிப்பினை
செயல்படுத்தும் பொருட்டு, புதிரை வண்ணார் இன மக்களின் நிலையை உயர்த்துவதற்கும் கல்வியில் மேம்பாடு அடையச் செய்வதற்கும் ஏதுவாக இவ்வின மக்களின் வாழ்வாதாரம் பற்றிய அறிக்கை மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான மென்பொருள் உருவாக்குதல், கணக்கெடுப்பு நடத்துதல், இணைய முகப்பினை (Portal) உருவாக்குதல், தொழில் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள ரூ.10 கோடி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணை வெளியிடப்பட்டது.

The post புதிரை வண்ணார் இன மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...