×

திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை கணக்கெடுக்க கேமரா பொருத்தும் பணி இன்று துவக்கம்

*மூன்று நாட்கள் நடக்கிறது

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை கணக்கெடுக்க கேமரா பொருத்தும் பணி இன்று தொடங்குகிறது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, புள்ளிமான், மிளா மான், காட்டுப்பன்றி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இங்கு கடந்த வாரம் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது புலிகளை கணக்கெடுக்க, அவற்றின் நடமாட்டம் இருக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த இடங்களில் இன்று கேமரா பொருத்தும் பணி துவங்க உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புலிகள் நடமாட்டம் உள்ள இடங்களை தேர்வு செய்துள்ளோம். மேற்குத்தொடர்ச்சி மலையில் அடர்த்தியான வனப்பகுதிகளிலும் அமைதியான சூழல் உள்ள இடங்களிலும் கேமரா பொருத்த உள்ளோம். இதற்கான பணியில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட உள்ளனர். இன்று தொடங்கி 9ம் தேதி வரை 3 நாட்கள் பணிகள் நடைபெற உள்ளன. புலிகள் நடமாடும் இடங்களை தவிர 40 பீட்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. இந்த கேமராவை பொறுத்தவரை இரவிலும் துல்லியமாக செயல்படும். மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் குறைந்தது 300 கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

The post திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை கணக்கெடுக்க கேமரா பொருத்தும் பணி இன்று துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Meghamalai Tiger Reserve ,Tiruvilliputhur ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்...