×

ஸ்பெயினில் நடைபெற்ற பாரம்பரிய சான் ஃபெர்மின் திருவிழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்..!!

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் பிரசித்திபெற்ற எருது சண்டையின் தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்பெயினின் பாம்ப்லோனா நாட்டில் நடைபெறும் எருது சண்டையை காண உலகம் முழுவதும் இருந்து அங்கு மக்கள் குவிவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எருது சண்டை தொடங்கியதை குறிக்கும் சான் ஃபெர்மின் எனப்படும் பாரம்பரிய திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாம்ப்லோனா நாட்டில் கூடிய மக்கள் பட்டாசுகளை வெடித்து ஆட்டம், பாட்டத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கலைஞர்கள் இசை கருவிகளை வாசிக்க தொடங்கியதும் வெள்ளை ஆடையும், கையில் சிவப்பு துணிகளையும் ஏந்தி வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரமே அதிர்ந்தது. மக்களின் கொண்டாட்டத்துடன் முதல் நாள் நிறைவடைந்ததை அடுத்து இன்றிலிருந்து எருது சண்டை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

The post ஸ்பெயினில் நடைபெற்ற பாரம்பரிய சான் ஃபெர்மின் திருவிழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Traditional San Fermin Festival ,Spain ,Pamplona, Spain ,
× RELATED கார்பன் உமிழ்வை குறைக்க குறைந்த தூரம்...