×
Saravana Stores

கம்பன் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

 

காரைக்குடி, ஜூலை 7: காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா கூட்டம் நடந்தது. தாலுக்கா குழு உறுப்பினர் வெங்கிட்டு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது.

அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட நிலையில், பணிகள் முடிந்தும் இதுவரை மீண்டும் இயக்கப்பட வில்லை. மக்கள் அதிகமாக பயணிக்கும் இந்த வழித்தடத்தில் மீண்டும் ரயிலை இயக்க வேண்டும். ரயில் நிலையத்தின் அருகே நடைமேம்பாலம் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. தவிர இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.எனவே ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post கம்பன் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kampan ,Karaikudi ,Marxist ,Communist ,Party ,Taluk ,Vengittu… ,Kamban ,Dinakaran ,
× RELATED நாளை உங்களைத் தேடி திட்டம்