×

மரக்காணம் அருகே ஈசிஆர் சாலையில் மறியல் செய்த 42 பேர் மீது வழக்கு

மரக்காணம், ஜூலை 7: மரக்காணம் அருகே அனுமந்தை குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (56). இவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள விசைசைப்படகு நேற்று முன்தினம் நள்ளிரவில் நடுக்கடலில் மர்மமான முறையில் தீ பற்றி எரிந்து நாசமானது. இதனால் மன உளைச்சல் அடைந்த அனுமந்தை குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர்கள் மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் இல்லாததால் தான் ஆண்டுதோறும் எங்களது மீன்பிடி படகுகள், வலைகள் போன்றவைகள் இயற்கை சீற்றங்களின் பொழுது கடலில் மூழ்கி நாசமாகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மீனவர்களுக்கும் பல லட்சம் மதிப்பில் சேதம் உண்டாகிறது. எனவே மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள துறைமுகப் பணியை உடனடியாக துவங்க வலியுறுத்தி புதுவை- சென்னை ஈசிஆர் சாலையில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த காவல்துறையினர், வருவாய்த்துறையினர், மீன்வளத்துறையினர், கடலோர காவல் படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையில், சமாதானம் அடைந்த மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இவர்கள் நடத்திய சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய அனுமந்தை மீனவர் குப்பத்தை சேர்ந்த முருகன்(39), சண்முகம் (55) மற்றும் 25 ஆண்கள், 15 பெண்கள் உள்பட 42 நபர்கள் மீது மரக்காணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post மரக்காணம் அருகே ஈசிஆர் சாலையில் மறியல் செய்த 42 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : ECR ,Marakkanam ,Marakanam ,Mathiyalagan ,Anumanthai Kuppam ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...