×

புதுப்பாளையம் பாறைக்குழியில் விடிய, விடிய எரிந்த தீ

 

திருப்பூர், ஜூலை 7: திருப்பூர் அருகே உள்ள புதுப்பாளையம் பாறைக்குழியில் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பாறைகுழியில் உள்ள குப்பையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.காற்றும் வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து அதிகமாக இருந்ததால் திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரவு விடிய விடிய தீயணைக்கும் பணி நடந்தது. இதற்கிடையே தீ விபத்து நடந்த பகுதிக்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post புதுப்பாளையம் பாறைக்குழியில் விடிய, விடிய எரிந்த தீ appeared first on Dinakaran.

Tags : Pudupalayam rock pit ,Tirupur ,Pudupalayam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...