×

ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை-கயாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லையில் இருந்து கயாவிற்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மேலாளர் ராஜலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: ஆடி அமாவாசையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில், நெல்லையில் இருந்து கயாவிற்கு ‘ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை’ என்ற பெயரில் சுற்றுலாவை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஆடி அமாவாசையன்று, கயாவில் முன்னோர்களுக்கு வழிபடும் வகையில் சுற்றுலா பயணிகள் அங்கிருக்கும் வகையில் அழைத்து செல்லப்படுவார்கள். இந்த பயணத்திற்காக தெற்கு ரயில்வேயின் சுற்றுலா பிரிவு சார்பில் பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ரயிலில் 3 ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள் இருக்கும். இந்த ரயிலில் 750 பேர் பயணம் மேற்கொள்ளலாம். இந்த சுற்றுலா ரயில் அடுத்த மாதம் 7ம் தேதி நெல்லையில் இருந்து பயணத்தை தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம் (அலகாபாத்), உஜ்ஜைனில் உள்ள ஓம்காரேஷ்வரர் மற்றும் மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கங்கள். ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய புண்ணிய தலங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தங்குமிடம், உணவு என கட்டணமாக சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூ. 21,800, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கு ரூ. 39,100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேர மருத்துவ வசதி உண்டு. அதுமட்டுமின்றி 10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு உள்ளது. இந்த பயணத்துக்கு www.irctctourism.com என்ற இணைய முகவரியில் ஆகஸ்ட் 5 தேதிக்குள் முன்பதிவு செய்யலாம். மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு எல்டிசி சான்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை-கயாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai-Gaya ,Chennai ,Southern Railway ,Nellai ,Gaya ,Aadi Amavasai.… ,Aadi ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...