×

சென்னை புறநகர் ரயிலில் அச்சுறுத்தும் வகையில் கைகளில் கத்தி, கற்களை வைத்துக்கொண்டு பயணம் செய்த 3 மாணவர்கள் கைது

சென்னை: நேற்று சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை வரை செல்லும் புறநகர் இரயில் வண்டி எண். 42417 விம்கோ நகர் இரயில் நிலையத்தில் நின்றபோது மதியம் 15.15 மணிக்கு மாநில கல்லூரி மாணவர்களில் சிலர் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கைகளில் கத்தி மற்றும் கற்களை வைத்துக்கொண்டு இரயிலில் பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை நோக்கி சரமாரியாக எறிந்துள்ளனர். இதனால் இரயில் வண்டியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்து இரயில் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மேற்படி இரயில் வண்டியில் பயணம் செய்த பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அஜீத், துணை உதவி ஆய்வாளர், இரயில்வே பாதுகாப்புப்படை, தண்டையார்பேட்டை என்பவர் கொடுத்த புகாரைப்பெற்று கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலைய குற்ற எண். 125/2023 u/s 147, 148, 294(b), 332, 336, 506(ii) IPC, Sec(3) TNPPD Act 1992 r/w 152, 153 IR Act-ன் படி வழக்கு பதிவு செய்து சசிகலா ஆய்வாளர், கொருக்குப்பேட்டை அவர்களால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்ய V.வனிதா காவல்துறை கூடுதல் இயக்குனர், இருப்புப்பாதை, சென்னை அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் பொன்ராமு, காவல் கண்காணிப்பாளர், இருப்புப்பாதை, சென்னை அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரமேஷ், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்புப்பாதை, எழும்பூர் பொறுப்பு சென்னை சென்ட்ரல் அவர்கள் மேற்பார்வையில் சசிகலா, காவல் ஆய்வாளர், கொருக்குப்பேட்டை மற்றும் கோவிந்தராஜி, காவல் ஆய்வாளர், சென்னை சென்ட்ரல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடி வந்த நிலையில் இன்று 06.07.2023 ஆம் தேதி 12.30 மணிக்கு இவ்வழக்கில் சம்மந்தபட்ட மாநில கல்லுரியை சேர்ந்த எதிரிகள் 1. சர்வேஷ்வரன் (வ/22) எம்.ஏ, பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு த/பெ. சிவலிங்கம் 2 கிரிதரன் (வ/19), பி.எஸ்.ஸி. உயிரியல் மூன்றாம் ஆண்டு த/பெ. கணபதி, 3. மௌலீஸ்வரன் (வ/18), பி.காம். இரண்டாம் ஆண்டு த/பெ.குமரேசன், கும்மிடிபூண்டி, திருவள்ளூர் மாவட்டம் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேற்கண்ட சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் கற்கள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது. விசாரணையில் மாநில கல்லூரி மாணவர்கள் முன்கூட்டியே விம்கோ நகர் இரயில் நிலையத்திற்கு வந்து கற்களை தயாராக வைத்துக்கொண்டிருந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்த இரயில் வண்டியின் மீது எறிந்துள்ளனர் என தெரியவருகிறது. எதிரிகள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும், இரயில்கள் மற்றும் இரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தும் வகையிலும் நடந்துக்கொள்ளும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

The post சென்னை புறநகர் ரயிலில் அச்சுறுத்தும் வகையில் கைகளில் கத்தி, கற்களை வைத்துக்கொண்டு பயணம் செய்த 3 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Central Railway Station ,Sulurpet ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது