×

எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சைபர் கிரைம் போலீஸ் மனு

மதுரை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. மதுரை எம்பி சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா டிவிட்டரில் அவதூறாக பதிவிட்டார். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிந்த மதுரை சைபர் கிரைம் போலீசார், எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர். இந்த வழக்கில் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்கிய மதுரை ஜேஎம் 1 நீதிமன்றம், 30 நாட்களுக்கு மதுரை சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில் தனக்குரிய நிபந்தனையை மாற்றம் செய்து சென்னையில் கையெழுத்திட அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி எஸ்.ஜி.சூர்யா, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். நிபந்தனையை சென்னைக்கு மாற்றக் கோரும் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவின் நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. ஜாமீன் நிபந்தனைபடி கடந்த 2ம் தேதி முதல் சைபர் கிரைம் போலீஸ் முன் ஆஜராகி சூர்யா கையழுத்திடவில்லை.

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறியதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சைபர் கிரைம் போலீஸ் மனு appeared first on Dinakaran.

Tags : Cybercrime Police ,SG Surya ,Madurai ,BJP ,State Secretary ,Cybercrime ,Dinakaran ,
× RELATED உபா சட்டத்தில் 6 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை