×

அதிமுக மாவட்ட அவை தலைவர் ஆபாச ஆடியோ

வேப்பூர், ஜூலை 6: கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக அவை தலைவராக இருப்பவர் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு(63). முன்னாள் நல்லூர் ஒன்றிய சேர்மன். தற்போது அவரது மனைவி நல்லூர் ஒன்றிய துணை சேர்மனாக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வேப்பூர் வட்டார வாட்ஸ் அப் குழு ஒன்றில் மாவட்ட அவை தலைவர் தங்கராசு தனது மொபைலில் இருந்து ஒரு ஆடியோவை பகிர்ந்துள்ளார் அதில் தங்கராசு, ஒரு பெண்ணிடம் ஆபாசமாக அவரது உடல் உறுப்புகளை மிகவும் ஆபாசமாக கொச்சையாக வர்ணித்து இன்று இரவு உன்னிடம் வந்து உடலுறவு வைத்துக்கொள்வேன் என பேசியுள்ளார். பின்னர் இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த ஆடியோவை, தான் வேறொரு பெண்ணிடம் தமாசாக பேசி அனுப்புவதற்கு பதிலாக குழுவில் பகிர்ந்து விட்டதாகவும், இதனை குழுவில் இருப்பவர்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு விளக்கம் அளித்து மறு ஆடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதிமுக மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு ஆபாசமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. அதிமுக மாவட்ட அவை தலைவர் பொறுப்பில் இருக்கக்கூடியவர் இவ்வளவு ஆபாசமாக பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுக மாவட்ட அவை தலைவர் ஆபாச ஆடியோ appeared first on Dinakaran.

Tags : AIADMK District Council ,President Abasa Audio ,Veypur ,Thangarasu ,Periyanesalur ,Cuddalore ,West district AIADMK council ,Dinakaran ,
× RELATED பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பைக்...