×

திருவிடைமருதுார் அருகே 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவிடைமருதூர்: திருவிடைமருதுார் அருகே சமத்தனார்குடியில் 3 கோயில்களில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. நாச்சியார் கோவில் சமத்தனார்குடி அண்ணா நகரில் விசாலாட்சி அம்மன் சமேத காசி விசுவநாதர், பூர்ணா புஷ்கலா சமேத ஐயனார் , தர்மசாஸ்தா ஐயப்பன் ஆகிய கோவில்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு தினமும் காலை, மாலை இருவேளைகளும் யாக பூஜைகள் நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நேற்று 4ம் கால யாக பூஜைகள் நிறைவுற்று மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மல்லாரி வாத்தியங்கள் இசைக்க புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு செய்யப்பட்டு அய்யனார், ஐயப்பன், காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருவிடைமருதுார் அருகே 3 கோயில்களில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kumbabishekam ,Thiruvidimarthurar ,Thiruvidimarthur ,Samathanarkudi ,Nachyar Temple ,Thiruvidamarudurar ,
× RELATED வேதாரண்யம் அருகே பழமை வாய்ந்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்