×

கறம்பக்குடி அருகே செயல்பாட்டுக்கு வந்த புதிய மின்மாற்றி

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அதரான்விடுதி, வெள்ளாள விடுதி ஆகிய கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கு தங்களது தோட்டங்களில் நீண்ட நாட்களாக நிலவி வந்த மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் 63 kv திறன் கொண்ட புதியமின் மாற்றிகளை அதிரான் விடுதி வெள்ளாளவிடுதி மேட்டு பட்டி ஆகிய பகுதிகளில் புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா கலந்து கொண்டு தலைமை வகித்து ரிப்பன் வெட்டி புதிய மின்மாற்றிகளை தொடங்கி இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கறம்பக்குடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் தவ பாஞ்சாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றிகளை அமைத்து கொடுத்த அரசுக்கும், திமுக எம்எல்ஏவுக்கும், மின் வாரியத்திற்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

The post கறம்பக்குடி அருகே செயல்பாட்டுக்கு வந்த புதிய மின்மாற்றி appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,Karambakkudi ,Atharanvidhudi ,Vellala Udm ,Pudukottai ,Karambakkudi taluk ,
× RELATED கந்தர்வகோட்டையில் நடப்பு கல்வியாண்டிலேயே ஐடிஐ திறக்க வேண்டும்