×

ராணுவ ஆள் சேர்ப்பு தற்காலிக கூடாரம் அகற்றம் மாணவர்கள் மனிதநேயம் வளர்த்து கொள்ள ஜே ஆர்சி கவுன்சிலர்கள் வழி காட்ட வேண்டும்

பெரம்பலூர்: பள்ளி மாணவர்கள் சுகாதாரம், நட்புறவு, மனிதநேயம், சேவை மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்ள ஜே ஆர்சி கவுன்சிலர்கள் வழி காட்ட வேண்டும். பெரம்ப லூர்மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் துணைக்குழு கூட்ட த்தில் மாவட்டக்கல்வி அலு வலர் கலைச்செல்வி வே ண்டுகோள் விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஜூனி யர் ரெட் கிராஸ் அமைப் பின் இந்த ஆண்டு செயல் பாடுகளை வரையறை செய்யும்பொருட்டு நேற்று பெரம்பலூர் அரசு மேல்நி லைப் பள்ளி வளாகத்தில் ஜே.ஆர்.சி துணைக்குழுக் கூட்டம் பெரம்பலூர் மாவ ட்ட முதன்மைக் கல்வி அலு வலர் மணிவண்ணன் வழி காட்டுதலின்பேரில் நடை பெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தின் 22 மேல்நிலை,உயர்நிலை, நடுநிலை மற்றும் தனியார், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து தலைமை ஆசிரியர்களும், பள்ளி முதல்வர்களும் கல ந்துகொண்டனர். இக்கூட்ட த்திற்கு பெரம்பலூர் மாவட்டக் கல்விஅலுவலர் கலை ச்செல்வி தலைமை வகித்து பேசுகையில், பள்ளி மாணவர்கள் இந்த ஜே.ஆர் சி அமைப்பின் மூலம் சுகாதாரம், நட்புறவு, மனிதநே யம், சேவை ஆகிய மனப் பான்மைகளை வளர்த்துக் கொள்ள ஜேஆர்சி கவுன்சி லர்கள் வழிகாட்ட வேண் டும் என்றார். மாவட்டக் கல்வி அலுவலர் கள் (தொடக்கக்கல்வி) அண்ணாதுரை,(தனியார்) சுப்பிரமணியன், பெரம்ப லூர் அரசு மேல்நிலைப்ப ள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி, மாவட்ட ஐஆர் சிஎஸ் கிளை கௌரவச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

கூட்டத்தில் பெரம்ப லூர் மாவட்டக் கன்வீனர் ராதாகிருஷ்ணன் நடப்பா ண்டு செயல்பாடுகளை எடு த்துக்கூறி, அதனை செயல்படுத்தும் விதம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி னார். இக்கூட்டத்தில் 2022-2023ம் கல்வியாண்டின் வரவுசெலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக் கைகள் கல்வி அதிகாரிக ளிடம்சமர்ப்பிக்கப்பட்டு ஒப் புதல் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் கன்வீனர் ஜோதிவேல், இணை கன்வீ னர்கள் துரை, ரகுநாதன், மண்டல அலுவலர்கள் செ ல்வராஜ், காசிராஜா, பூவேந் தரசு, தேவேந்திரன், செல்வ சிகாமணி, செல்வகுமார், ஜெயக்குமார், நல்லதம்பி, ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அமைப் பின் செயல்பாடுகளை எடு த்துக் கூறினர். முன்னதாக மாவட்ட பொருளாளர் கரு ணாகரன் வரவேற்றார். முடி வில் பொருளாளர் ராஜா நன்றி கூறினார்.

The post ராணுவ ஆள் சேர்ப்பு தற்காலிக கூடாரம் அகற்றம் மாணவர்கள் மனிதநேயம் வளர்த்து கொள்ள ஜே ஆர்சி கவுன்சிலர்கள் வழி காட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : JRC ,Perambalur ,Dinakaran ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...