×

ஆழ்துளை கிணறு அமைக்க நூறு சதவீதம் மானியம்

 

மதுரை, ஜூலை 6: வேளாண் பொறியியல் துறை மூலம் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எஸ்.சி., எஸ்.டி. விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுகிறது. இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் வஞ்சி நகரம், கொடுக்கம்பட்டி, கச்சிராயன்பட்டி, சென்னகரம்பட்டி, திருவாதவூர், ஆமூர், சருகுவலையபட்டி, நாவினிபட்டி, கல்லணை, சக்கிமங்கலம், அரும்பனூர், ஒத்தக்கடை, மீனாட்சிபுரம், கள்ளந்திரி, வெள்ளாளங்குன்றம், செட்டிகுளம், வீரபாண்டி, ஆலத்துார், இராணியம், குடுசேரி, கெஞ்சம்பட்டி, வேலம்பூர், சிட்டுலொட்டி, மோதகம், தனக்கன்குளம், தென்கலை, மேலக்கால், இரும்பாடி கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் அல்லது சோலார் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைக்கப்படும். பயன்பெற விரும்புவோர், அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கும் அதிகமாக கிணறு அமைக்கவோ, கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட் நிறுவுவதற்கு ஆகும் கூடுதல் செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். விவரங்களுக்கு மதுரை உதவி செயற்பொறியாளரை 97877 33015, 99431 66688 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

The post ஆழ்துளை கிணறு அமைக்க நூறு சதவீதம் மானியம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Department of Agricultural Engineering ,Borewell ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை