×

ரூ.30.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள்

 

மதுரை, ஜூலை 6: மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் ரூ.30.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலைகளை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 75, வசந்தநகர் 3வது மேற்கு 1வது குறுக்கு தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 54, காஜிமார் முதல் தெரு மற்றும் ஹீரா நகர் ஆகிய 2 பகுதிகளில் ரூ.23.50 லட்சம் மதிப்பீட்டிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டது.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவும், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, உதவி கமிஷனர் மனோகரன், உதவிசெயற்பொறியாளர் சேகர், மாநகராட்சி பிஆர்ஓ மகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post ரூ.30.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் appeared first on Dinakaran.

Tags : Paver block ,Madurai ,Paver ,Madurai Central Assembly ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...